வணிகம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (11.02.2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதன்படி, 18 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 953 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 118 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 60 ஆயிரத்து 745 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

90 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 28 ஆயிரத்து 276 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 40 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 233 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மிட்கேப் நிப்டி ஏற்ற இறக்கமின்றி 13 ஆயிரத்து 952 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 113 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 68 ஆயிரத்து 96 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.