மும்பை,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று (01.04.2026 - புதன்கிழமை) அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, 348 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 22 ஆயிரத்து 679 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 173 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 448 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 460 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 981 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
1 ஆயிரத்து 186 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 134 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
301 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 460 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 302 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 883 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.