வணிகம்

சரிவில் இருந்து அதிரடியாக மீண்ட இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குச்சந்தை இன்று (07.04.2026 - செவ்வாய்கிழமை) அதிரடியாக உயர்ந்தது. காலை வர்த்த தொடக்கத்தில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை அதிரடியாக மீண்டு வர்த்தக இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

அதன்படி, 155 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 123 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 107 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 716 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 82 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 24 ஆயிரத்து 685 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

509 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 616 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

37 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 620 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 124 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 308 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.