மும்பை,
இஸ்ரேல் - ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதல் உலகப்போருக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதலால் இந்திய பங்குச்சந்தை இன்று (04.03.2026 - புதன்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 385 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 850 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 84 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 755 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 543 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 20 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 122 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 116 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
255 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 34 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 327 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 997 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.