மும்பை,
மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. ஈரானுக்கு எதிரான போரை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல், ஈரானும் தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை இன்று (08.04.2026 - புதன்கிழமை) அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, 873 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 997 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2 ஆயிரத்து 987 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 703 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 367 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 53 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
2 ஆயிரத்து 946 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 562 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
599 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 219 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 3 ஆயிரத்து 3393 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 701 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.