வணிகம்

கடும் சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மும்பை,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று (09.03.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 680 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 763 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 2 ஆயிரத்து 320 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 458 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

995 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 656 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 2 ஆயிரத்து 247 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 670 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

392 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 773 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 2 ஆயிரத்து 715 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 276 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.