வணிகம்

கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

மும்பை,

இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (30.03.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.

அதன்படி, 488 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 331 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 999 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 275 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

851 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 521 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 635 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 71 ஆயிரத்து 947 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

358 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 158 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2 ஆயிரத்து 236 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 56 ஆயிரத்து 580 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.