வணிகம்

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

பட்ஜெட் தினமான நேற்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. ஆனால், வாரத்தின் முதல் நாளான இன்று (02.02.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தையில் நிப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 156 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 978 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 7 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

28 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 667 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 595 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 290 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

84 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 105 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 5 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 615 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.