மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (24.02.2026 - செவ்வாய்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 288 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 424 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 216 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 61 ஆயிரத்து 47 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 159 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 28 ஆயிரத்து 295 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 225 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
29 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 448 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 126 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 68 ஆயிரத்து 539 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.