காரைக்கால்
காரைக்கால் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. முகாமில் ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் குழு வருகை புரிந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். காலை 9 மணிக்கு தொடங்கிய சிறப்பு முகாம் பகல் 12 மணி வரை நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.