மாவட்ட செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டில் ரூ.15 லட்சம் கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனா.

மூங்கில்துறைப்பட்டு,

திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் உள்பட போலீசார், அருளம்பாடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாபு என்பவர் வீட்டில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 14 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பாபுவை பிடித்து விசாரித்தனர், அதில், அவரது மருமகன்களான சுத்மலையை சேர்ந்த வல்லரசு, மன்னார் குடியை சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் சேர்ந்து கஞ்சாவை பல்வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.