புதுச்சேரி

கார் கண்ணாடி உடைப்பு

புதுவை மாசிமக விழாவின் சாமி ஊர்வலத்தின் போது கார் கண்ணாடியை உடைத்தவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை குயவர்பாளையம் சுந்தரமேஸ்திரி வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் நெல்லுமண்டி சந்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காரில் விழுப்புரத்தில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காமராஜர் சாலையில் வந்தபோது, மாசிமக விழாவிற்கான சாமி ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து குமார் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு சாமிகும்பிட முயன்றார். அப்போது ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சாரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (29) என்பவர் குமாரை தகாத வார்த்தையால் பேசி காரின் கண்ணாடியை கையால் உடைத்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை