மாவட்ட செய்திகள்

கோஷ்டி மோதல்; சிறுவன் உள்பட 14 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் தொடர்பாக சிறுவன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்த வரதராஜனின் மகன் விஜயபாலன்(வயது 36). இவர் சம்பவத்தன்று இரவு அணைக்கரை சென்று தனது குழந்தைக்கு மருந்து வாங்கிக்கொண்டு திரும்பி வந்தார். அப்போது எதிர்திசையில் செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், விஜயபாலன் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயபாலன், செல்வகுமாரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு, பின்னர் கோஷ்டி மோதலாக மாறியது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் விஜயபாலன் கொடுத்த புகாரின் பேரில் செல்வகுமார் (19), மதியழகன் (64), வைரம் (42), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீதும், சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில் விஜயபாலன் (36) சிங்காரவேலன் மற்றும் 8 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.