புதுச்சேரி

அமைச்சரின் ஆதரவாளர்கள் 8 பேர் மீது வழக்கு

பேனர் வைப்பதில் ஏற்பட்ட மோதலில் அமைச்சரின் ஆதரவாளர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

காரைக்கால்

பேனர் வைப்பதில் ஏற்பட்ட மோதலில் அமைச்சரின் ஆதரவாளர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இருதரப்பினர் மோதல்

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே பேனர் வைப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் அமைச்சரின் ஆதரவாளரான அய்யப்பன் தாக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜ்குமார், பாலாஜி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஜெயக்குமார், புருணோதேவா, தவசுமுத்து, சரவணன், அய்யப்பன், கார்த்தி, நிதின், ஈஸ்வர் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேனருக்கு பாதுகாப்பு

இந்தநிலையில், கோட்டுச்சேரி பகுதியில் போட்டி போட்டு பேனர் வைப்பது தொடர்வதால், இரு தரப்பினர் இடையே பேனர் கிழிப்பு, அடிதடியில் ஈடுபடாமல் இருக்க, கோட்டுச்சேரி போலீசார், 24 மணி நேரமும் பேனர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பேனர்களுக்கு காவல்நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை