புதுச்சேரி

கடைக்காரரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு

திருபுவனை அருகே கடைக்காரரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

திருபுவனை

திருபுவனை அருகே ஆண்டியார்பாளையம் மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சக்திபிரியன் (வயது 28). இவர் மதகடிப்பட்டு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜனா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இன்று காலை சக்திபிரியன் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்துகொண்டு இருந்தார். அப்போது ஜனா மற்றும் அவர்களது நண்பர்களான ராஜ்குமார், சதீஷ், சந்துரு ஆகியோர் அங்கு வந்து சக்திபிரியனிடம் தகராறு செய்து, இரும்பு குழாய் மற்றும் கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் காயமடைந்த சக்திபிரியன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் திருபுவனை போலீசில் அளித்த புகாரின்பேரில் ஜனா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்