புதுச்சேரி

அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடாந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

புதுச்சேரி

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க.வினர் வரவேற்று உப்பளத்தில் உள்ள தலைமை கழகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. இணை செயலாளர் கணேசன், துணை செயலாளர்கள் சேரன், நாகமணி, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்