சினிமா துளிகள்

செல்போன் ஆய்வு: ஷில்பா ஷெட்டியிடம் மீண்டும் விசாரணை

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் சில செயலிகளிலும் ஆபாச படங்களை பதிவேற்றியதில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து அதுகுறித்தும் விசாரிக்கின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ராஜ்குந்த்ரா அலுவலக ஊழியர்கள் 4 பேர் அப்ரூவர் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. அவர் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்து விட்டார். இந்தநிலையில் ஷில்பா ஷெட்டியின்

செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர் யாரிடமெல்லாம் பேசினார் என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஷில்பா ஷெட்டியிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்