திருத்துறைப்பூண்டி,
நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை சேகரிக்கும் வண்டிகளை நகராட்சி ஆணையர் நாகராஜன் வழங்கினார். இதில் நகராட்சி பொறியாளர் ராதா, மேலாளர் நாராயணசாமி, சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நகராட்சி ஆணையர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை குறைந்த காரணத்தினால் நிலத்தடி நீர் 30 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்குவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்ச கூடாது. குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு தண்ணீரை பயன்படுத்த கூடாது. மீறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.