திருச்சி, ஆக.31-
திருச்சி காஜாப்பேட்டையில் வாலிபரை தாக்கி தங்க சங்கிலி பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
திருச்சி காஜாப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 36). இவர் வீடுகளுக்கு கரையான் மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு காஜாப்பேட்டை பசுமடம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த 4 பேர் செல்லையாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். மேலும், அவரது கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியையும் பறித்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
ஆனால் செல்லையா சுதாரித்து கொண்டு சங்கிலியை இறுக்க பிடித்து கொண்டார். இதில் தங்க சங்கிலி அறுந்து 1 பவுன் அவர்களிடம் சிக்கி கொண்டது. தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்லையா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்த புகாரின்பேரில், பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல்நடத்தியஅதேபகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (37), ஸ்டீபன்(25), மணிகண்டன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், சங்கிலியுடன் தப்பிய மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.