எம்.ஏ. எம்.பில் பட்டதாரியான நடிகர் சார்லி நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்கள் மத்தியில் பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
சமீபத்தில் அவர் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு சென்று உரையாற்றினார். 12 வயதில் இருந்து 18 வயது வரையிலான சிறுவர்களுடன் அவர் கலந்துரையாடினார்!