பெங்களூரு

துமகூரு மாவட்டம் தேவராயனதுர்கா வனப்பகுதியில் வவ்வாலை வேட்டையாடிய சிறுத்தை

துமகூரு மாவட்டம் தேவராயனதுர்கா வனப்பகுதியில் வவ்வாலை சிறுத்தை வேட்டையாடியது.

தினத்தந்தி

துமகூரு:

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் தேவராயனதுர்கா வனப்பகுதியில் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு மற்றும் நடமாட்டத்தை கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர், தனியார் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து பொருத்தியுள்ளனர். இந்த நிலையில் தேவராயனதுர்கா வனப்பகுதியில் பொருத்தியிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை ஒன்று பெரிய வவ்வாலை வேட்டையாடி வாயில் கவ்வியபடி சுற்றிய காட்சிகள் பதிவாகி உள்ளன.

இதுகுறித்து வனவிலங்கு ஆராய்ச்சியாளர் சஞ்சய் குப்பி என்பவர் கூறுகையில், சிறுத்தைகள் பல்வேறு வகையான விலங்குகளை வேட்டையாடி உண்பது ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. மான், காட்டுப்பன்றி, ஆடு, நாய், முயல், முள்ளம்பன்றி ஆகியவற்றை அவை வேட்டையாடி உணவாக்கி கொள்கின்றன. வவ்வாலை சிறுத்தை வேட்டையாடுவது என்பது அரிதானது. தேவராயனதுர்கா வனப்பகுதியில் சிறுத்தை, வவ்வாலை வேட்டையாடியுள்ளது. அந்த வவ்வால் இந்தியன் பறக்கும் நரி (ஹாலக்கி) என்ற இனத்தை சேர்ந்தது. இதன் எடை 1 கிலோ ஆகும். இந்த வவ்வாலின் இறகுகளை விரித்தால் 5 அடி நீளத்திற்கு இருக்கும் என்றார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு