மாவட்ட செய்திகள்

திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா

அருப்புக்கோட்டை அருகே திருச்சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி டேனியல் திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. வட்டார தலைவர் பாஸ்டர் யோசுவா கண்ணன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். பெந்தேகோஸ்தே மாவட்ட தலைவர் ஜேக்கப்ஜெம்பு லிங்கம் அமைச்சரை வரவேற்றார். இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ரமேஷ், ஒன்றிய குழுத்தலைவர் சசிகலா பொன்ராஜ், ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், டேனியல் சங்க மாவட்ட தலைவர் பீட்டர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்து கெண்டனர்.