மிஷ்கின் டைரக்டு செய்து வந்த பிசாசு 2 படப்பிடிப்பு முடிவடைந் தது. அதில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். சந்தோஷ் பிரதாப், பூர்ணா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு திண்டுக்கல்லில் 3 கட்டங்களாக நடைபெற்றது.
பிசாசு 2 படத்தில் நடித்தது பற்றி பூர்ணா கூறும்போது, நான் ஏற்கனவே மிஷ்கினுடன், சவரக்கத்தி படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மிஷ்கின் மிகச் சிறந்த டைரக்டர். அவருடைய திரைக்கதை புதிதாக, தெளிவாக இருக்கும்.
கதை சொல்லும் பாணி, ஹாலிவுட் ஸ்டைலில் பிரமிக்க வைக்கும். அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் அவரிடம் நான், பிசாசு 2' படத்தின் கதையை கேட்கவும் இல்லை. அவர் எனக்கு சொல்லவும் இல்லை.
பிசாசு 2 படம் ரசிகர்கள் மத்தியில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.