சினிமா செய்திகள்

ரூ.10 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி

தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

தினத்தந்தி

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார்.

அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிக்பிரதர்ஸ் நிகழ்ச்சியில் இனவெறிக்கு ஆளான சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். இந்தியில் தயாராகும் பெயரிடப்படாத நகைச்சுவை படத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை சபீர்கான் இயக்குகிறார். இந்தநிலையில் உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத மருந்து விளம்பர படத்தில் நடிக்க ஷில்பாவை அணுகினர். இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் தருவதாகவும் பேசினர்.

ஆனால் அதில் நடிக்க ஷில்பா ஷெட்டி மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களில் நடிக்க நான் விரும்ப மாட்டேன். மாத்திரைகள் தற்காலிக தீர்வுதான். சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே நோயில் இருந்து விடுபடலாம் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்