சினிமா செய்திகள்

எனக்கு தன்மானம் பெரிது “ரூ.100 கோடி சொத்துக்களை தூக்கி எறிந்தேன்”-நடிகை வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் சந்திரலேகா, மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

தினத்தந்தி

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தை தயாரித்தார். வனிதாவுக்கும் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை சென்றது.

ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபரை மணந்து விவாகரத்து செய்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது குழந்தை கடத்தல் புகாரில் சிக்கி போலீசார் நேரில் விசாரணை நடத்திய சம்பவமும் நடந்தது. அதன்பிறகு பிக்பாஸ் அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் நடிகை கஸ்தூரியும், வனிதாவும் சமூக வலைத்தளத்தில் வாயை மூடு, அறிவு இல்லை என்றெல்லாம் பேசி மோதிக்கொண்டது பரபரப்பானது. தற்போது பிக்பாஸ் இறுதி போட்டியில் இருந்து இலங்கை தமிழர் தர்ஷனை வெளியேற்றியது பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்த அவருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டனர். நடிகை வனிதாவும் சில கருத்துக்களை பகிர்ந்தார். அதை சிலர் விமர்சித்தனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில், எனது குடும்பம் பற்றியும் என்ன நடந்தது என்பது குறித்தும் நன்றாக அறிந்தவர்களுக்கான பதிவு இது. எனக்கு கண்ணியம், பெருமை முக்கியம். எனது தன்மானத்துக்காக ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களையே தூக்கி எறிந்து இருக்கிறேன். போலியாக இருப்பவர்களுக்கு நான் பணிவது இல்லை. கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது