சினிமா செய்திகள்

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் கைது

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் மும்பை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்து உள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் வருகிற 30-ந்தேதி நடிகர் சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுத்து உள்ளார். இதனை தொடர்ந்து பரபரப்படைந்த மும்பை போலீசார், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தானே மாவட்டத்தில் உள்ள சஹாபூர் பகுதியில் இருந்து அழைப்பு வந்திருப்பது தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மிரட்டல் அழைப்பு விடுத்தது 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை