சினிமா செய்திகள்

மாநாடு திரைப்படத்தின் 2 நாள் வசூல் ரூ.14 கோடி

மாநாடு திரைப்படம் 2 நாட்களில் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'.

இந்தப் படம் இரண்டு நாள்களுக்கு முன்பு நவம்பர் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம்லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

திரைப்பிரபலங்கள் பலரும் மாநாடு படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிம்புவின் சினிமா கேரியரில் இந்த படம் அவருக்கு ஒரு 'கம் பேக்' கொடுத்திருக்கிறது என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாநாடு திரைப்படம் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் இரண்டு நாள்களில் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு