சினிமா செய்திகள்

“2020-ம் ஆண்டு கஷ்டத்தை கொடுத்துள்ளது” - -நடிகை ரகுல் பிரீத் சிங்

கொரோனா பயத்தில் கழிக்கிறோம் என்றும், 2020-ம் ஆண்டு கஷ்டத்தை கொடுத்துள்ளது என்றும் நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா ஊரடங்கில் அளித்த பேட்டி வருமாறு:-

உலக மக்கள் அனைவரையும் கொரோனா மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது. இந்த 2020-ம் ஆண்டில் பாதியை கடந்து விட்டோம். இந்த வருடம் எல்லோருக்குமே பெரிய கஷ்டத்தை கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு நாளையும் பயத்தில் கழிக்கிறோம். காலம் கற்றுக்கொடுத்துள்ள பாடத்தை கவுரவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த கொரோனா கஷ்டத்தில் இருந்து எப்போது வெளியே வருவோம் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். கூடுமானவரையில் எல்லோரும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம். நமக்குள் இருக்கும் சக்தி சாமர்த்தியங்களை வைத்து கொரோனாவை எதிர்கொள்ள முயற்சி செய்யலாம். நம் முன்னோர்கள் இதைவிட பெரிய நோய்கள், விபத்துக்கள் யுத்தங்களையெல்லாம் சந்தித்து இருக்கிறார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் தினமும் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது நாம் பாதுகாப்பான நிலையில்தான் இருக்கிறோம். எனவே கொரோனா கஷ்டத்தில் பின்வாங்காமல் போராடலாம். வீட்டோடு இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். நம்மை உயிரோடு வைத்துள்ள கடவுளுக்கு நன்றி சொல்லலாம். எதுவும் ஆகாது என்று நேர்மறையாக சிந்திப்போம்.

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு