சினிமா செய்திகள்

47 வயதாகும் நடிகை ஷோபனாவுக்கு குடும்ப நண்பருடன் திருமணம்?

47 வயதாகும் நடிகை ஷோபனாவுக்கு குடும்ப நண்பருடன் திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

பிரபல தமிழ் நடிகை ஷோபனா. எனக்குள் ஒருவன், தளபதி, இது நம்ம ஆளு உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சென்னையில் பரத நாட்டியப்பள்ளியும் நடத்தி வருகிறார். மலையாளத்திலும் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 47 வயதாகும் ஷோபனாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.கடந்த 2001-ம் ஆண்டு ஒரு சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர், பெரும்பாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிறரிடம் பேசுவது இல்லை.

இந்த நிலையில் ஷோபனா வுக்கு அவரது குடும்ப நண்பர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அவரின் பெயர், என்ன செய்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதுபற்றி ஷோபனா கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை. அந்த செய்தியை அவர், மறுக்கவும் இல்லை. எனவே அவர், திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.நடிகை ஷோபனா, பிரபல நடிகை பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்