சினிமா செய்திகள்

“என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி” சிறப்பு விருது பெற்ற பின் ரஜினிகாந்த் பேச்சு

என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

கோவா,

இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது.

50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா விழாவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கி, 28-ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கப்பட்டது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருதை வழங்கினர்.

விருதை பெற்றுக்கொண்ட பின் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி. என்னுடைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்-மந்திரி, எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சன் ஆகியோருக்கு நன்றி.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி