புதுடெல்லி
65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் இன்று அறிவித்தார் அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
* சிறந்த படம் பகத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்
* சிறந்த இந்திப்படம் நியூட்டன்
* சிறந்த தமிழ் படம் TO LET ( செழியன் இயக்கியுள்ள இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை)
* மாம் இந்தி படத்தில் நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது
* சிறந்த தெலுங்கு படம் - காஸி
* காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது
* சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாசுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறந்த கன்னட படம்- ஹெப்பட்டு ராமக்கா
சிறந்த குழந்தைகள் படம்- மேகோர்கியா
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது பெறும் படம்- டப்பா(மராத்தி)
சிறந்த நடிகர்- ரித்தி சென் (நகர்கிர்டான், மேற்கு வங்கமாநிலம்)
சிறந்த துணை நடிகர்- ஃபகத் ஃபாசில் (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் , மலையாளம்)
சிறந்த துணை நடிகை- திவ்யா தத்தா (இராடா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்- பனிதா தாஸ், (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், அசாம்)
தாதசாகேப் ஃபால்கே விருது- வினோத் கண்ணா, நடிகர்
சிறந்த பொழுதுப்போக்கு படம்- பாகுபலி- 2
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி-2 படம் 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.
சிறந்த சண்டைப்பயிற்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த பொழுதுபோக்கான திரைப்படம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் பாகுபலி-2 படம் விருது வென்றுள்ளது.
சிறந்த இயக்குநர்- ஜெயராஜ் (பயானகம், மலையாளம்)
சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது- பம்பாலி (சிஞ்ஜர்)
சிறந்த ஒளிப்பதிவு- பயானகம், மலையாளம்
சிறந்த பாடலாசிரியர்- பிரஹலாத் (மார்ச் 22, முத்து ரத்தனந்த பியாடே)
சிறந்த ஆடியோகிராஃபி - வில்லேஸ் ராக்ஸ்டார்ஸ், அசாமி
சிறந்த ஒலி அமைப்பு- லடுக்கி
சிறந்த அரங்கமைப்பு- டேக் ஆஃப் (சந்தோஷ் ராமன், டேக்-ஆஃப், மலையாளம்)
சிறந்த ஒப்பனை- ராம் ரஜாஜ் (நகர்கிர்டான்,)
சிறந்த ஸ்பெஷல் எஃப்கெட்ஸ்- பாகுபலி 2
சிறந்த நடனமைப்பு- கணேஷ் ஆச்சாரியா (டாய்லெட், இந்தி)
சிறந்த சண்டைக்காட்சி- அப்பாஸ் அலி மொஹுல் (பாகுபலி 2)
சிறந்த திரைக்கதை- தொண்டிமுதலும் திர்க்ஷாஷ்யம், மலையாளம்
சிறந்த தழுவல் திரைக்கதை- பயானகம், மலையாளம்
நடுவர் விருது- நகர் கிர்தான்
சிறந்த ஆடை வடிவமைப்பு - கோபிந்தா மந்தல்(நகர் கிர்தான்)
சிறந்த சவுண்ட் டிசைன்- வாக்கிங் வித் தி வின்ட்
சிறந்த லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிங் - மல்லிகா தாஸ்( வில்லேஜ் ராக்ஸ்டார்)
சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் - இராடா
சிறந்த சமூக திரைப்படம் : ஆலோருக்கம்
சிறந்த திரைப்பட விமர்சகர் : கிரிதர் ஜா
சிறந்த துணை நடிகை - திவ்யா தத்தா (இராடா)
சிறந்த வசனம் : சம்பித் மோகன்டி (ஹலோ அர்சி)
சிறந்த கன்னட படம் - ஹேபெட்டு ராமக்கா
சிறந்த லடாகி படம் - வாக்கிங் வித் தி வின்ட்
சிறந்த துலு படம் - படாயி
சிறந்த ஒரியா படம் - ஹலோ அர்சி
சிறந்த மராத்தி படம் - கச்சா லிம்பு
சிறந்த பெங்காளி படம்- மயூராக்ஷி