சினிமா செய்திகள்

உண்மை சம்பவத்தை படமாக்கும் பெண் டைரக்டர்

`ஆதாரம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் இருவரும் நாயகன்-நாயகியாக நடிக்கின்றனர். நடராஜன், கதிரேசன், செந்தில் நடராஜன், ராதா ரவி, ஒய்.ஜி. மகேந்திரன், கதிரவன் பாலு, கார்த்திக், சக்தி, வெங்கடேஷ் ஆறுமுகம் தென்காசி நாதன் வினோத், அமுதா குமார், ஜீவா கார்த்திக், அஷ்வின் சுதந்திரம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பிரபல டைரக்டர் டி.என்.பாலுவின் மகள் கவிதா டைரக்டு செய்துள்ளார். சமூக அக்கறை கொண்ட கதையம்சத்தில் நீதிமன்ற பின்னணியில் தயாராகி உள்ளது. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரித்துள்ளனர்.

படம் பற்றி கவிதா கூறும்போது, ``இது எனது முதல் படம். இந்தப் படம் சி.சி.டி.வி பற்றியது அல்ல. பதிந்த விஷயம் மறைக்கபட்டதுதான் படத்தின் கரு. ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கி உள்ளோம்'' என்றார். இந்தப் படம் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நடிகர் கதிரவன் கூறினார்.

ஒய்.ஜி.மகேந்திரன் கூறும்போது, ``படத்தில் நான் நீதிபதியாக வருகிறேன். இயக்குனர் தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும். மக்கள் ஆதரவு தருவார்கள்'' என்றார். இசை: தர்ம பிரகாஷ், ஒளிப் பதிவு: என்.எஸ்.ராஜேஷ் குமார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...