சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க வந்த அபிராமி

தினத்தந்தி

தமிழில் கமல்ஹாசனுடன் `விருமாண்டி' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான அபிராமி தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் இப்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். `பாபா பிளாக் ஷீப்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை ராஜ்மோகன் ஆறுமுகம் டைரக்டு செய்கிறார். படம் குறித்து அவர் கூறும்போது, ``பள்ளிக் குழந்தை களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. இதில் அபிராமி, ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத் திரத்தில் நடிக் கிறார். கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது உணர்வுப்பூர்வமான நடிப்பை பார்த்து படக்குழுவினர் கண் கலங்கினர்'' என்றார்.

இதில் அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, மதுரை முத்து, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்கரவர்த்தி, போஸ் வெங்கட், வினோதினி, வைத்தியநாதன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். ராகுல் தயாரிக்கிறார். இசை: சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து