சினிமா செய்திகள்

வெப் தொடரில் அபிராமி

தினத்தந்தி

முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான அபிராமியும் 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி' என்ற பெயரில் தயாராகி உள்ள திகில் வெப் தொடரில் நடித்துள்ளார். காணாமல் போகும் மாணவி ஏரியில் பிணமாக கிடக்கிறார். அவரை கொலை செய்தது யார் என்பதே கதை.

அபிராமி கூறும்போது, "நான் நடித்துள்ள முதல் வெப் தொடர் இது. எனக்கு திரில்லர் படங்கள் பிடிக்கும். இதுவும் அதுபோன்ற கதையம்சத்தில் தயாராகி உள்ளது. திறமையான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த தொடரில் இணைந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கல்லூரி, குடும்ப நிகழ்வுகளை உள்ளடக்கிய தொடராக இருக்கும். நான் இரு குழந்தைகளின் தாயாகவும், இளம் விதவையாகவும் நடித்து இருக்கிறேன். தொடர் அனைவருக்கும் பிடிக்கும்'' என்றார். ராகவ், லிசி ஆண்டனி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ஜான் நம்ரிதா, அபிதா, பிராங்கிளின், சில்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த தொடரை விஷால் வெங்கட் டைரக்டு செய்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் என்.குமார் இசையமைத்து இருக்கிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்