சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்கும் அமலா

5 வருடங்களுக்கு முன்பு ‘மனம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் அவருக்கு தாயாக நடிக்கிறார்.

தினத்தந்தி

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அமலா. மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1992-ல் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

5 வருடங்களுக்கு முன்பு மனம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் அவருக்கு தாயாக நடிக்கிறார். படத்தின் இயக்குனர் ஸ்ரீகார்த்திக் கூறிய கதை பிடித்து போனதால் நடிக்க சம்மதித்துள்ளார்.

காதல், நட்பை பிரதிபலிக்கும் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் கதாநாயகியாக ரீத்து வர்மா மற்றும் நாசர், ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்