சினிமா செய்திகள்

வில்லியாக நடிப்பது கஷ்டம் - நடிகை வரலட்சுமி

வில்லி வேடங்களில் நடிப்பது கஷ்டம். ஆனாலும் அதில் என்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தமிழில் 'போடா போடி' படத்தில் அறிமுகமாகி பிரபல நடிகையாக உயர்ந்துள்ள வரலட்சுமி சரத்குமார் வில்லி வேடங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதையொட்டி வரலட்சுமி அளித்துள்ள பேட்டியில், ''நான் சினிமா துறைக்கு வந்து பத்து ஆண்டுகளில் 45 படங்களில் நடித்திருக்கிறேன். எனது வில்லி வேடத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. வில்லி வேடங்களில் நடிப்பது கஷ்டம். ஆனாலும் அதில் என்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன். எனது 10 வருட சினிமா பயணம் சுலபமாக இல்லை. எத்தனையோ எதிர்ப்புகள், நிராகரிப்புகளை எதிர்கொண்டேன். ஆனாலும் நிறைய நல்ல விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். கடினமாக உழைத்தேன், முயற்சியை கைவிடவில்லை. இப்போது திரும்பி பார்க்கும்போது 45 படங்களில் நடித்து விட்டேனா என்ற மலைப்பு வருகிறது. எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பல பட வாய்ப்புகள் கிடைத்தன. ஓய்வில்லாமல் நடித்து மிகவும் பிஸியாக போகிறது சினிமா வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு