சினிமா செய்திகள்

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய் காலமானார்

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் (வயது 44) காலமானார்.

தினத்தந்தி

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 'துப்பாக்கி' திரைப்படத்தில் வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போக, வருமானத்துக்கு கஷ்டப்பட்டார்.

சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். அவருக்கு, கேபிஒய் பாலா, நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் மருத்து செலவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்.

இந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை