சினிமா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம்...!

அஜித்குமாரை பார்த்து ரசிகர்கள் ‘ தல... தல... ’ என கோஷம் எழுப்பினர்

தினத்தந்தி

திருப்பதி,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கார் ரேஸ்களில் அஜித்குமார் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமையலையான் கோவிலில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். முன்னதாக , கோவில் வளாகத்தில் நடந்து அஜித்குமாரை பார்த்து ரசிகர்கள் தல... தல... என கோஷம் எழுப்பிய நிலையில் இது கோவில் என கூறிய அஜித் செய்கை செய்தார்.

கடந்த சில நாட்களுக்குமுன் கேரளாவில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி அம்மன் கோவிலில் அஜித் குமார் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி