சினிமா செய்திகள்

நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதிஹரிகரன் பாலியல் புகார் “காதல் காட்சிகளில் இறுக்கமாக கட்டிப்பிடித்தார்”

நடிகர் அர்ஜூன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் செய்தார். காதல் காட்சிகளில் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்தார் என்று அவர் கூறினார்.

அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் நிபுணன். இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த சுருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். அருண் வைத்தியநாதன் இயக்கினார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை சுருதிஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

நானும் அர்ஜூனும் நிபுணன் என்ற படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தின் பாடல் காட்சியின்போது அர்ஜூன் வேண்டும் என்றே என்னை பலமுறை கட்டிப்பிடித்தார். இறுக்கமாக அணைத்தார். அப்போது அந்த இடத்தில் 50 பேருக்கு மேல் அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு அது பிடிக்காததால், கொஞ்சம் தள்ளியே நின்றேன்.

படப்பிடிப்பை பாதியில் ரத்து செய்துவிட்டு போனால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார் என்று அர்ஜூனின் நடவடிக்கைகளை சகித்துக் கொண்டு நடித்தேன்.

அவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்ததும் விருந்துக்கு போகலாமா? என்று அழைத்தார். என் அறைக்குள் வந்து என்னை பார் என்று பலமுறை சொன்னார். நான் அதற்கு பதிலே சொல்லவில்லை.

அவர் திரும்ப, திரும்ப தனது அறைக்கு வரும்படி என்னை அழைத்தார். நான் அவரது அறைக்குள் செல்லவில்லை.

இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறினார்.

நிபுணன் படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் கூறியதாவது:-

அர்ஜூன் பக்கா ஜென்டில்மேன். தொழில் மீது பக்தி கொண்ட திறமையான நடிகர். அவர் மீது சுருதி புகார் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த படத்தில் நெருக்கமான காதல் காட்சி இருந்தது உண்மை. அதற்காக பலமுறை ஒத்திகை பார்த்தோம்.படப்பிடிப்பு முடிந்த பின் அர்ஜூன் என்னை தனியாக அழைத்தார். எனக்கு மிக நெருக்கமான காதல் காட்சிகளை வைக்காதே, எனக்கு வயதுக்கு வந்த 2 மகள்கள் இருக்கிறார்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரை பற்றி சுருதி ஹரிகரன் புகார் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

சுருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள் என்று அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு