சினிமா செய்திகள்

நடிகர் சங்க தேர்தல்; நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு

நடிகர் சங்க தேர்தல் நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதற்கு தேவையான பாதுகாப்பை மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் வழங்குகின்றனர். தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்காக நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் தேர்தலில் இதுவரை 445 வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் மோகன் வந்துள்ளார். ஆனால் அவரது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நடிகர் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். நடிகர் மோகன் பெயரில் கள்ள வாக்கு பதிவானது என்ற தகவல் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்