சினிமா செய்திகள்

அண்ணாமலையார் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம்

நடிகர் பாபி சிம்ஹா பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தினத்தந்தி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமானபீட்சா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இதையடுத்து 'காதலில் சொதப்புவது எப்படி'.சூது கவ்வும்', 'பகலவன்', 'ஜிகர்தண்டா', 'மகான்' , இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஜிகர்தண்டா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பாபி சிம்ஹா பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, தனது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம் செய்தார். இதன்பின், அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா