சினிமா செய்திகள்

மீண்டும் இயக்குனர் ஆனந்த் எல்.ராயுடன் இணைகிறார் நடிகர் தனுஷ்..!

'அத்ரங்கி ரே' திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் தனுஷ் இயக்குனர் ஆனந்த் எல்.ராயுடன் இணைகிறார்.

சென்னை,

நடிகர் தனுஷ் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் வெளியான 'ராஞ்சன்னா' என்ற திரைப்படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சோனம் கபூர் நடித்து இருந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் ஆனந்த எல்.ராய் இயக்கத்தில் 'அத்ரங்கி ரே' திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் அத்ரங்கி ரே திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது 2 இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒரு படத்தில் 3-வது முறையாக இயக்குனர் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து பணிபுரிய உள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் எல்.ராய் தன்னுடைய கலர் எல்லோ புரொடக்சன்ஸ் மூலம் தயாரித்து இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் ஆக்சன் காட்சிகள் நிறைந்த காதல் கதையாக உருவாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மாறன் திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்