புனே,
இந்தி திரை துறையில் பழம்பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் தர்மேந்திரா. ஷோலே படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.
அவரது இரு மகன்களில் ஒருவர் சன்னி தியோல். அவரது மகனான கரண் தியோலின் திருமண நிகழ்ச்சி இன்று மும்பையின் தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் நடந்தது. இதில், நடிகர் தர்மேந்திரா அவரது மற்றொரு மகனான பாபி தியோல் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, அவர் உற்சாக நடனம் ஆடினார். நிகழ்ச்சியில் தர்மேந்திராவின் மற்றொரு மகனான பாபி தியோலும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
நடிகர் தர்மேந்திராவின் இரு மகன்களும் நடிகர்களாக உள்ளனர். பேரன் கரணும் தந்தையை பின்பற்றி நடிகரானார். 2019-ம் ஆண்டு சன்னி தியோலின் இயக்கத்தில் வெளிவந்த பால் பால் தில் கே பாஸ் என்ற படத்தில் நடித்து திரை வாழ்க்கையை தொடங்கினார்.