சினிமா செய்திகள்

விபத்தில் நடிகர் கஞ்சா கருப்புவின் தம்பி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதில் கஞ்சா கருப்புவின் தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை,

சிவகங்கை ஆவரங்காடு பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 45). இவர் நடிகர் கஞ்சா கருப்புவின் உடன்பிறந்த தம்பி ஆவார். இவர் நேற்று அதிகாலை சிவகங்கை பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிவகங்கை நகர் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் விஜய்க்கு கஞ்சா கருப்பு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.