சென்னை,
எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து;தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் வருமுன் காக்க வாய்ப்பு. கொசஸ்தலை ஆற்றின் 1,090 ஏக்கர் கழிமுகத்தை சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல் கழிவுகளை கொட்டுகின்றன.
ஏழைகளை புறக்கணிக்கும் எந்த அரசும் நல் ஆற்றை புறக்கணிக்கும் உதவாக்கரைகள் சென்னை- காட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், சிவன்படைவீதி குப்பத்து மீனவ நண்பர்களின் குரலை ஊடகங்கள் தயவாய் உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.