சினிமா செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை

சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணவத் மரியாதை செலுத்தினார்.

சென்னை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணவத்தும் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.

தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல்வேறு தடைகளை கடந்து முதல்-அமைச்சர் ஆவது வரை உள்ள காட்சிகள் இடம்பெற்று உள்ளது

ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலா, சசிகலாவாக பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார்.

வரும் 10ம் தேதி 'தலைவி' திரைப்படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இன்று சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு