சினிமா செய்திகள்

பசுமை வழி சாலைக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு

சென்னை–சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. விவசாய நிலங்களில் அதிகாரிகள் பசுமை சாலைக்காக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பசுமை வழி சாலை திட்டத்துக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சேலம் சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவை இல்லாதது. விவசாய நிலங்களையும் மலைகளையும் அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கிறவர்களுக்கு இயற்கை விவசாயம் பெரும் சவாலாக இருக்கிறது. என்றார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு