சினிமா செய்திகள்

'வெள்ளி விழா நாயகன்' நடிகர் மோகனின் 45 ஆண்டு கால திரைப்பயணம்

தமிழ் திரையுலகில் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர், நடிகர் மோகன். இவர் தனது திரைப்பயணத்தில், 44 ஆண்டுகளை கடந்து 45-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

தினத்தந்தி

இதன் அடையாளமாக அவர், 'ஹரா' என்ற படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை விஜய் ஸ்ரீஜி டைரக்டு செய்து இருக்கிறார். தனது மறுபிரவேசத்தையொட்டி மோகன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், மதிய உணவு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மோகன் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தார்கள்.

விழாவில் மோகன் பேசும்போது அவரிடம், 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்து விட்டீர்களா...அந்த படத்தை பற்றி கருத்து சொல்ல முடியுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு, "பொன்னியின் செல்வன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பின், கருத்து சொல்கிறேன்" என்று மோகன் பதில் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது