சினிமா செய்திகள்

பார்த்திபனின் ஆதங்கம்

பார்த்திபன், தான் ஒருவரே நடித்து இயக்கிய ஒத்தசெருப்பு சைஸ் 7 படத்துக்கு சில தேசிய விருதுகள் வழங்காதது வருத்தம் அளிக்கிறது என்று பார்த்திபன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தினத்தந்தி

பார்த்திபன், தான் ஒருவரே நடித்து இயக்கிய ஒத்தசெருப்பு சைஸ் 7 படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு ஜூரி விருதும், சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும் வழங்கப்பட்டது. ஆனாலும் மேலும் சில விருதுகளை வழங்காதது வருத்தம் அளிக்கிறது என்று பார்த்திபன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, உண்மையாக சொல்வதென்றால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுகள் ஒரே படத்துக்கு நிறைய கொடுப்பார்கள். அதுபோல் இந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது உள்பட இன்னும் சில விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். மேலும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் ஒத்த செருப்பு.

இந்த படம் தனித்துவமான படம். அவ்வாறு இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏன் நடிப்புக்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. சிறந்த நடிகருக்கான விருது கிடைக்காத நிலையில் அடுத்த படத்தில் கிடைக்க முழு முயற்சி செய்வேன். எனது அடுத்த படமான இரவின் நிழல் சிங்கிள் ஷாட்டில் உருவாகிறது. உலகில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி தான் இந்த படம் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்