சினிமா செய்திகள்

ஜெயிலர் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்...!

ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.

தினத்தந்தி

சென்னை,

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஓரிரு தினங்களில் படமாக்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் எஞ்சிய படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்